கோவை விமான நிலையத்திற்கு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக விமான நிலையத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் தனியார் மூலம் விற்பனை செய்யும் கடை உள்ளது.
இந்த கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு வெளிநாட்டு மதுபாட்டில்களை வாங்கி, அவற்றை கடத்தி வெளியில் அதிக விலைக்கு விற்பதாக கோவை மாநகர போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகர போலீசார் விமான நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மது பாட்டில்களை விமான நிலையத்தில் இருந்து கடத்தி அதிக விலைக்குவிற்ற கடையின் விற்பனை நிர்வாகிகளான குளித்தலையை சேர்ந்த ஜீவானந்தம் (வயது29), சென்னையை சேர்ந்த ராஜேஷ்பாபு (41), கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஸ்ரீராக் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 65 வெளிநாட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மதுபான கடை மேலாளர் ஜெபின் என்பவரை போலீசார் தேடி வந்த னர். இந்த நிலையில் நேற்று மாலை அவர் கைது செய்யப் பட்டார்.