விபத்தை ஏற்படுத்தும் நெடுஞ்சாலை ‘ டிவைடர்’

0
13

உடுமலை; உடுமலை – பழநி ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் வகையில், தாறுமாறாக மாறியுள்ளது.

உடுமலை – பழநி நெடுஞ்சாலையில் கால்வாய் பாலம் பகுதியில் இருந்து, ரோட்டின் குறுக்கே கற்கள் கொண்டு டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன விபத்துகளை கட்டுப்படுத்தவும், அதிவேகமாக வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தவிர்க்கவும், டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில், கனரக வாகனங்கள் ரோட்டை கடக்கும் போது, டிவைடர்களை ஒட்டியே திரும்புவதால் மற்ற வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டிவைடர் கற்கள் தாறுமாறாக திரும்பியுள்ளன. இதனால், இரவு நேரங்களில் அதிகப்படியான விபத்து ஏற்படுகிறது.

டிவைடர்களை மீண்டும் வரிசைப்படுத்துவதற்கும், அப்பகுதியில் வாகனங்கள் திரும்பும் வகையிலும் தடுப்புகளை அமைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.