விடுமுறை அளிக்காத 194 நிறுவனங்கள்; தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை

0
8

தேசிய பண்டிகை தினங்களான ஜன., 26, மே 1, ஆக., 15, அக்., 2 ஆகிய நாட்களிலும், குறைந்தது 5 பண்டிகை நாட்களிலும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

பணிபுரிபவர்களுக்கு, இரட்டிப்பு ஊதியம் அல்லது விடுமுறை தினத்துக்கு முன்னதாகவோ, பிறகோ ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

இதன் அடிப்படையில், தொழிலாளர் தினத்தில், கோவையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய, ஆய்வு மேற்கொள்ள, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி உத்தரவிட்டார். கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என, 236 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, 194 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.