விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘லைகர்’ படத்தின் டிரைலர் வெளியானது..!

0
168

இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் ‘லைகர்’. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், லைகர் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. லைகர் படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.