வாஜ்பாய் பிறந்தநாள் விழா கோலாகலம்; மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

0
20

கோவை; மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 100வது பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த மூன்று குழந்தைகளுக்கு, பா.ஜ.,சார்பில் தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பா.ஜ.,சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்த நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள, பா.ஜ.,அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, தீபம் ஏற்றி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,சேலஞ்சர்துரை உள்ளிட்ட நிர்வாகிகள், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு நேற்று பிறந்த மூன்று குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் அணிவித்தனர்.

நோயாளிகளுக்கு இனிப்பு,ரொட்டி, பழங்கள் வழங்கினர். வயோதிகர்களுக்கு சேலை, வேஷ்டி, போர்வைகளை வழங்கினர். பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், செல்வகுமார், தேசிய செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.