வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

0
15

கோவை: கோவை மாவட்டத்தில் இன்றும் (23ம் தேதி), நாளையும் (24ம் தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது.வரும், 2025 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்து வருகிறது; இப்பணி, 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக, இன்றும் (23ம் தேதி), நாளையும் (24ம் தேதி), கோவை மாவட்டத்தில், 3,117 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அவர்களுக்கு உதவி புரிவர். காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை இம்முகாம் நடைபெறும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.