அன்னூர் : கோவை பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றம் மற்றும் புளியம்பட்டி, அண்ணாமலையார் திருக்கோவில் வழிபாட்டு குழு சார்பில், தமிழ் வழிபாட்டு நெறிமுறை இலவச பயிற்சி வகுப்பு, புளியம்பட்டி, கே.ஜி. திருமண மண்டபத்தில் வருகிற 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.
பயிற்சி வகுப்பில், திருக்கோவில் பூஜை மற்றும் வாழ்வியல் சடங்குகள், செயல் விளக்கத்துடன் இலவசமாக கற்றுக் கொள்ளலாம். ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். குறைந்தது ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தங்குமிடம், உணவு இலவசம்.
மேலும் விபரங்களுக்கு, 95009 51756 எனும் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, வழிபாட்டுக் குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.