தொண்டாமுத்தூர்; வடிவேலம்பாளையத்தில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, வடிவேலம்பாளையம் பகுதியில் எஸ்.ஐ.,கவியரசு தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடிவேலம்பாளையம், விநாயகர்கோவிலில் சிலர் அமர்ந்து, பணம் வைத்து வெட்டாட்டம் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்தமுருகன்,45, ராம்குமார்,24, ரமேஷ்,32 ஆகிய மூவரையும், போலீசார் கைதுசெய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து, 1,800 ரூபாய் பணம் மற்றும்சீட்டுக்கட்டுகளைபறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அரவிந்த் என்பவரை தேடி வருகின்றனர்.