வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
6

கோவை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோவை 100 அடி ரோட்டில் உள்ள யூனியன் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், வங்கிகளில் போதுமான அளவு ஊழியர்களை நியமிக்க வேண்டும், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும், வங்கி நிர்வாகத்தில் அரசு தலையீடு செய்ய கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.