போத்தனூர்; கோவை, குனியமுத்தூர் அடுத்து குளத்துபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுமான பணி நடக்கிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் மாலிக், 25 வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், சிமென்ட் மூட்டைகளை லிப்ட் மூலம் மூன்றாம் தளத்திற்கு ஏற்றும் பணியை மேற்கொண்டார்.
அப்போது லிப்ட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரமேஷ் மாலிக் கீழே தவறி விழுந்தார். படுகாயமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.