லாரி திடீரென நகர்ந்ததால் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

0
71

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென நகர்ந்ததால்   சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

சிறுமுகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென நகர்ந்ததால் சாலையோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தண்ணீர் லாரி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை நீலிபாளையத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 36), டிரைவர். இவருடைய மகன் ரித்தீஷ் (4). நீலிபாளையம் 4 ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலை தூய்மைப்படுத்துதற்காக தனியார் தண்ணீர் டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டது.

பின்னர் லாரியை டிரைவர் கோவில் முன்பு நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். ஹண்டு பிரேக் போடவில்லை என்றும், லாரியின் முன்பு பக்க டயர் முன்பு கல் எதுவும் வைக்கவில்லை என்று தெரிகிறது.

சிறுவன் பலி

இதற்கிடையில், கோவிலுக்கு முன்பு சாலையோரத்தில் ரித்தீஷ் மற்றும் சிறுவர்-சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் திடீரென தண்ணீர் லாரி முன்னோக்கி நகர் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தது.

இதனை சற்றும் கவனிக்காக சிறுவன் ரித்திஷ், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மேலும் தீபா ஸ்ரீ என்ற சிறுமி காயம் அடைந்தார். அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.dailythanthi.com/News/State/as-the-parked-truck-suddenly-moveda-4-year-old-boy-died-after-getting-caught-in-the-wheel-765481