லாரியில் பேட்டரி திருட்டு

0
7

கோவை, ஜன. 19: கோவை ராமநாதபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயலிங்கம் (38). இவர், சொந்தமாக செப்டிக் டேங் லாரி வைத்துள்ளார். லாரி டிரைவராக கார்த்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கார்த்திக் லாரியை ராமநாதபுரம் பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கார்த்திக் லாரியை எடுப்பதற்காக வந்தார். அப்போது ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி லாரியில் இருந்து திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், விஜய லிங்கத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர், ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.