லட்சுமி நரசிம்மர் கோவிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி

0
83

பொள்ளாச்சி- பாலக்காடு மெயின் ரோட்டில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று விஜய தசமியை முன்னிட்டு, இந்த ஆண்டு பள்ளியில் சேர இருக்கும் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதியில் இருந்துநூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சேவா சங்கம் இணைந்து செய்திருந்தன.