ரேஷன் துறையை தனித் துறையாக அறிவிக்க கோரி சிறப்பு கூட்டம்

0
15

கோவை; கோவையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், சிறப்பு கூட்டம் தாமஸ் கிளப் அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்த மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

தமிழக முதல்வர் கடந்த தேர்தலில், பொது வினியோகத்துறையை தனித்துறையாக அறிவிப்பதாக சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் அறிவிக்கவில்லை.

இந்த கோரிக்கையை வலியுறுத்த, அனைத்து ரேஷன் கடை பணியாளர்கள் சங்கங்களும் ஒன்றாக இணைய வேண்டும். உதாரணமாக, போக்குவரத்து, மின்சார வாரியம், வருவாய் துறை, மருத்துவ துறை உள்ளிட்ட பல துறைகள் ஒன்றிணைந்து, போராடி வெற்றி பெற்றுள்ளனர்.

அதற்கான முன்னெடுப்பாக, இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக மூன்று சங்கங்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். இன்னும் சில சங்கங்கள் இணைய உள்ளனர்.

கோரிக்கைகளை முன் வைத்து, மாநில அளவில் மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.