ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்

0
73

பொங்கல் பரிசு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தமிழகஅரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை வினியோ கம் செய்யும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.

அந்த டோக்கனில் பரிசுத்தொகுப்பு வழங்கும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

டோக்கன் வினிேயாகம்

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யப் பட்டு வருகிறது. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள், வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

ஒவ்வொரு கடைகளிலும் 700 முதல் 1000 ரேஷன் குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் தினமும் 200 பேர் வந்து பொங்கல் பரிசு வாங்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கன் பெற்றவர்கள் அதில் குறிப்பிட்ட நாட்களில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வாங்காதவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் சென்று பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.