ரேக்ளா ப ந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

0
4

போத்தனூர்,: கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மற்றும் வெள்ளலூர் மண்டல் பா.ஜ., சார்பில் நடந்த, ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

மூன்றாம் ஆண்டாக நேற்று, எல் அண்ட் டி பை-பாஸ் அருகே, கள்ளப்பாளையம் செல்லும் சாலையில் பந்தயம் துவங்கியது.

இதில் இரண்டு முதல் நான்கு பல் வரையான காளைகள் பிரிவுக்கு, 200 மீட்டர் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது

200 வண்டிகள் பங்கேற்ற இப்பிரிவில், மருள்பட்டி நந்தா, சரவணம்பட்டி சிரவை தம்பி, மடத்துக்குளம் அகிலேஷ், ஓடையகுளம் செல்வராஜு, அர்த்தநாரிபாளையம் சிவஞானம், தொண்டாமுத்தூர் கதிர்வேல் ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

ஆறு பல்லுக்கு மேல் உள்ள காளைகளுக்கு, 300 மீட்டர் பந்தய தூர பிரிவில், சரவணம்பட்டி சிரவைதம்பி, செம்மேடு கருப்புசாமி, அங்கலகுறிச்சி சுரேஷ், தீபாலபட்டி மனோகரன் கோவிந்தராஜு, சேர்வகாரன்பாளையம் கவின் செல்வன், நவக்கரை மகிழ்அன்பு ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை வென்றனர். இரு பிரிவிலும் பைக், ஆறு, நான்கு கிராம் தங்க நாணயங்கள் என, முறையே மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்டத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் வசந்தராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். சாலையின் இருபுறமும் திரளானோர் நின்று, சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு ரசித்தனர்

பொடி’ வைத்து பேசிய ராதிகா

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா பேசுகையில், ”தற்போது ஆங்காங்கே கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் செய்திகளை கேட்க முடிகிறது. அண்ணாமலையிடம் பிரச்னை என கூறினால், டில்லி சென்று அனைவரையும் சந்திப்போம் என்பார். இங்கு கூட குப்பைக்கழிவு பிரச்னை உள்ளது. 2026-ல் நீங்களும் ரெடி, மக்களும் ரெடி. அது எதற்காக என, 2026ல் தெரியவரும். நல்லதே செய்வோம்,” என்றார்.