ரெயில் நிலையத்தில் திடீர் வெடி சத்தம்

0
106

கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களால் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை ரெயில் நிலையத்தில் நேற்று காலையில் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஒன்று திரண்டு நின்றனர். அப்போது பயங்கர ஒலியுடன் திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சத்தம் கேட்ட திசை நோக்கி ஒடி சென்றனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 சக்கர வாகனத்தின் ஸ்டெப்னி டயர் வெடித்தது தெரியவந்தது. பின்பு அந்த வாகனத்தின் டிரைவர் அந்த டயரை அப்புறப்படுத்தினார். இந்த சத்தம் சிறிது நேரம் ரெயில் நிலைய பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த பொது மக்கள், பயணிகள் பீதி அடைந்தனர்.