கோவை, பிப். 8: கோவை உப்பார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர், கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு கடையில் டூத் பேஸ்ட் வாங்கினார். அதில், எம்.ஆர்.பி ரூ.58 என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், கடைக்காரர் ரூ.62 பில் போட்டு பணம் வசூலித்து விட்டார். எனவே, கூடுதலாக வசூலித்த 4 ரூபாயை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால், கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, விஜயகுமார், கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் 4 ரூபாயை திருப்பி கொடுக்க, கடைக்காரருக்கு உத்தரவிட்டனர். மேலும், கோர்ட் செலவாக ரூ.5 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டனர்