ரூ.2.24 கோடியில் புதிய வகுப்பறைகள்

0
12
கோவை; மாநகராட்சி பள்ளிகளில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவுள்ளன.
எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், சேதமடைந்துள்ள கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.90 லட்சம் மதிப்பீட்டில், புதிய வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.

உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் வகுப்பறைகள், சமையல் அறை கட்டப்படுகின்றன.

அதேபோல், தேவாங்க ஆரம்பப் பள்ளியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டப்படவுள்ளது.

89வது வார்டு ராமசெட்டிபாளையத்தில் உள்ள, மாநகராட்சி தொடக்க பள்ளியில் ரூ.62.60 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக நான்கு வகுப்பறைகள் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்