ரூ.2 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை

0
5

சூலூர்,ஜன.30: கோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் ஆக்கிரமித்து இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள இடத்தை வருவாய்த் துறையினர் அதிரடியாக மீட்டனர். கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் தனியார் ஒருவர் 50 சென்ட் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார்.அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை தகவல் அளித்தும் ஆக்கிரமிப்பு செய்திருந்த சிவசாமி என்பவர் இடத்தை காலி செய்ய மறுத்து வந்தார்.

இந்நிலையில் சூலூர் வட்டாட்சியர் தனசேகரன் உத்தரவின் பேரில் நேற்று அந்த நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர்.சுல்தான்பேட்டை போலீசார் பாதுகாப்பின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அங்கிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அரசு நிலத்தை நிலத்தை கையகப்படுத்தினர். கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.