ரூ.1000 கோடி ஊழலை மறைக்க தி.மு.க., நாடகம் நடத்துகிறது’

0
7

கோவை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், கூட்டம் நடத்தும் தமிழக முதல்வரை கண்டித்து, கோவை பா.ஜ., சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம், கோவை ராம்நகரில் நேற்று நடந்தது.

இதில் கோவை பா.ஜ., மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை, பக்கத்து மாநிலங்கள் கொடுப்பதில்லை. அதை கேட்டு பெற முடியாத தமிழக முதல்வர், அந்த மாநிலத்தின் முதல்வர்களை அழைத்து வந்து, தொகுதி மறுசீராய்வு என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறார்

தொகுதி மறுசீராய்வு என்றால் என்ன, அதனால் தமிழகம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்ற எந்த ஆதாரமும் இல்லாமல், ஒரு யூகம் செய்து கொண்டு தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவதாக, தி.மு.க., பிரசாரம் செய்கிறது.

இது ‘டாஸ்மாக்’ மது விற்பனையில் நடந்த, 1000 கோடி ரூபாய் ஊழலை மறைக்க தி.மு. க., நடத்தும் நாடகம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பா.ஜ., நிர்வாகிகள் கிருஷ்ண பிரசாத், ஆனந்த், சபரிகிரீஸ், மணிகண்டன், கவுரி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.