ஆக்கிரமிப்பு நிலங்கள் ஆய்வு
கோவை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து இந்து அறநிலையத்துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மேலும் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுப்பதுடன், நிலத்தை மீட்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
ரூ.10 கோடி நிலம் மீட்பு
இந்த நிலையில் கோவை சவுரிபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 27 சென்ட் கோவில் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்ததாக தெரியவந்தது.
இது பற்றி தகவலறிந்து சென்ற அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை போலீசார் உதவியுடன்மீட்டனர்.
மீட்கப்பட்ட இடத்தில் பெயர் பலகை வைத்ததுடன், கம்பிவேலி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.