ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் விளையாட்டுப் போட்டிகள்

0
3

துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில், 29ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் என, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 100 மீ., 200 மீ., 800 மீ., 1500 மீ., ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன், நிர்வாக அறங்காவலர் சுந்தர், சிறப்பு விருந்தினர் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேசிய நடுவர் சூசைநாதன் மார்ட்டின் ஆகியோர் பரிசு வழங்கினார்.

உடல் கல்வி இயக்குனர் நித்தியானந்தன், விளையாட்டு ஆண்டு அறிக்கை வாசித்தார். இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவன் எஸ்வந்த், மாணவியர் பிரிவில் இரண்டாம் ஆண்டு ரோபோடிக்ஸ் துறை மாணவி நட்சத்திரா ஆகியோர், மாணவர் பிரிவில் தனிநபர் பட்டத்தை பெற்றனர்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மாணவ, மாணவியர் பிரிவில் மஞ்சள் நிற அணியினர் பெற்றனர். ஏற்பாடுகளை, உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் மற்றும் உமாராணி ஆகியோர் செய்து இருந்தனர்.