கோவை.; ரயில்வே ஸ்டேஷனில் ஒரு மாதத்தில், 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
கடந்த ஒரு மாதகாலமாக, கோவை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, கஞ்சா கடத்தி வந்த பல வடமாநிலத்தவர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே போலீஸ் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘ரயில்களில் தொழிலாளர்கள் போல் வரும் கடத்தல்காரர்கள், கஞ்சாவை இங்குள்ள உள்ளூர் ஏஜென்ட்களிடம் கொடுத்து பணம் பெறுகின்றனர்.
போலீசார் சோதனை செய்வதை அறிந்து, அவற்றை கேட்பாரற்று விட்டுச் செல்கின்றனர்.
அவர்களையும் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்டறிய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்