கோவை: ரயில்களில் கடத்திய வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் கோவை வந்தது.
ரயிலின் பொதுப்பெட்டியில், பெட்டி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதை போலீசார் சோதனை செய்ததில், 250 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் இருந்தது. இதன் மதிப்பு, 1 கோடி ரூபாய்.
கைப்பற்றப்பட்ட மூலப்பொருள், கோவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல், தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில், கேட்பாரற்று பார்சல் ஒன்று கிடந்தது.
அதில், 18.50 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை கடத்திய நபர்கள் குறித்து, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.