கோவை; தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த, 50 நாட்களுக்கும் மேலாக உரத்தட்டுப்பாடு இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், ரஷ்யாவில், இருந்து கப்பலில் ஆந்திர மாநிலத்துக்கு வந்த உரம், ரயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை, திருப்பூர், நீலகிரிக்கு தேவையான உரம், வடகோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. இதில் கோவைக்கு, 504, திருப்பூருக்கு, 613, நீலகிரிக்கு, 229 டன் உரம் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.