ரஜினி படத்தின் புதிய தகவல்

0
88

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில் இதர நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அதற்கான செட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் இப்படத்தின் பல காட்சிகள் ஜெயிலில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கான ஜெயில் செட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.