யானைகள் புத்துணர்வு முகாம்; மீண்டும் துவங்க எதிர்பார்ப்பு

0
29

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்த, டாப்சிலிப்பில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம், கொரானா காலத்துக்கு பின் நடத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த, டாப்சிலிப் கோழிகமுத்தி மற்றும் வரகளியாறில் மொத்தம், 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு, 48 நாட்களுக்கு யானைகளுக்கு ஆரோக்கியமான உணவு, மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம் நடக்கும் நாட்களில், யானைகளுக்கு எந்த பணியும் வழங்காமல் முழு ஓய்வும் அளிக்கப்பட்டது. ஆனால், 2020ல், கொரோனா பரவலைத் தொடர்ந்து, புத்துணர்வு முகாம் நிறுத்தப்பட்டது. தற்போது வரை, அரசு, முகாம் நடத்துவதற்கான எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. தற்போது, புத்துணர்வு முகாம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவில் மற்றும் வனத்துறை யானைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு பின், யானைகளின் ஆரோக்கியத்திலும், பாகன் உத்தரவுக்கு கட்டுப்படுவதிலும் நல்ல மாற்றங்கள் காணப்பட்டன.

ஆனால், கொரோனா காலத்திற்கு பின், புத்துணர்வு முகாம் நடத்த அரசு தரப்பிலிருந்து எவ்வித உத்தரவும் கிடைக்கப் பெறவில்லை. முகாம் யானைகளுக்கு, வழக்கமாக ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகளே அளிக்கப்படுகிறது.

இவ்வாறு, கூறின