கோவையில் காந்திபுரம், பீளமேடு, சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிக்னலில் யாசகம் எடுக்கும் குழந்தைகளும், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் எடுக்கும் பெண்களின் எண்ணிக்கையும், அதிகம் பார்க்க முடிகிறது.
இக்குழந்தைகள் நிஜமாகவே, இப்பெண்களுக்கு பிறந்தவர்கள்தான் என்றால் பிரச்னை இல்லை. ஆனாலும், பச்சிளங்குழந்தைகளை காண்பித்து யாசகம் கேட்பது தவறு என்கின்றனர் போலீசார்.
இக்குழந்தைகள் பசியால் மயங்கி கிடக்கிறார்களா, அல்லது டோஸ் குறைந்த மயக்க மருந்தை புகட்டி, பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களா எனும் சந்தேகம் எழுகிறது.
தேசிய குற்ற ஆவண காப்பக (என்.சி.ஆர்.பி.,) 2023 டிச., மாதம் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, இந்தியாவில் இதுவரை மொத்தமாக பதிவான புகார்களின் படி, 47,000க்கும் மேல் குழந்தைகள் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும், அதில் 71.4 சதவீதம் மைனர் பெண் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போன்று, 2022ம் ஆண்டில் மட்டும், 83,350 குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டு, 80, 561 பேரை கண்டுபிடித்துள்ளனர்; 2789 குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் புகார்களில் சுமார், 90 சதவீதம் கடத்தப்பட்ட பதிவாகவே உள்ளது.
கடத்தப்பட்ட குழந்தைகள் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற புள்ளிவிபரங்களை பார்க்கையில், சிக்னலில் யாசகம் கேட்க பயன்படுத்தப்படும் குழந்தைகளும், கடத்தப்பட்டுதான் இருப்பார்களோ என்ற அச்சம் எழாமல் இல்லை.
அந்த குழந்தைகள் மீது பரிதாபப்பட்டு, பண உதவி செய்வதை, ஒட்டுமொத்தமாக நாம் நிறுத்திக்கொண்டால் மட்டுமே, இது போன்ற கடத்தல்களை தடுக்க முடியும்.
இக்குழந்தைகள் நிஜமாகவே, இப்பெண்களுக்கு பிறந்தவர்கள்தான் என்றால் பிரச்னை இல்லை. ஆனாலும், பச்சிளங்குழந்தைகளை காண்பித்து, யாசகம் கேட்பது தவறு என்கின்றனர் போலீசார்.
இக்குழந்தைகள் பசியால் மயங்கி கிடக்கிறார்களா, அல்லது டோஸ் குறைந்த மயக்க மருந்தை புகட்டி, பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்களா எனும் சந்தேகம் எழுகிறது.