கோவை மாவட்டம்விளாங்குறிச்சி கிராமத்தைசேர்ந்தவர் சோமசேகர். இவர் கோவைமாநகர குற்றப்பிரிவுஉதவி கமிஷனராக பணியாற்றிவருகிறார். இவரது மகன் பிரசன்ன விக்னேஷ் (வயது 27). இவர் கோவையில் உள்ளஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரும், கோவைவெள்ளப்பன்நகரை சேர்ந்தசவுந்தரராஜன் மகள் விஷ்ணுபிரியா (24)வும்நேற்று ஒரேமோட்டார் சைக்கிளில்அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தேரம்பாளையம் அருகே சென்றபோது சாலையோர மரத்தில் இருந்த காய்ந்த மரக்கிளை திடீரென முறிந்துமோட்டார் சைக்கிள்மீது விழுந்தது. இதில் இவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து,அப்பகுதிமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்ன விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணுபிரியாமேல்சிகிச்சைக்காககோவையில்உள்ள தனியார்ஆஸ்பத்திரிக்குகொண்டுசெல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
இந்த விபத்துகுறித்து காரமடை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.