பழுது நீக்கும் பணி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலைரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் பழுது நீக்கும் பணிக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணி மனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்னூர் ஊட்டி இடையே இயக்கப்படும் டீசல் என்ஜின் பழுது நீக்கும் பணிக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வந்தடைந்தது
அங்கு பழுது பார்க்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் டீசல் மலை ரெயில் என்ஜின் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டீசல் ெரயில் என்ஜினை மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள யார்டில் இறக்கி வைப்பதற்காக ஈரோட்டில் இருந்து அதிகாலை 4 மணிக்கு 140 டன் எடை கொண்ட ராஜாளி கிரேன் புறப்பட்டு காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
இறக்கி வைக்கப்பட்டது
அதன் பின்னர் டீசல் மலைரெயில் என்ஜினை பி.ஆர். எப்.வேகனில்இருந்து இறக்கி வைக்கும் பணி தொடங்கியது.
கோவை கோச் டெப்போ அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் கோச் பொறியாளர் முகமது அஷ்ரப், லோகோ பொறியாளர் சுப்பிரமணியம் மற்றும் ெரயில்வே தொழிலாளர்கள் கிரேன் ஆபரேட்டர் இர்ஷாத் அகமது கிரேனை இயக்க மலை ரெயில் டீசல் என்ஜின் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டது.