மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் பணம் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம் முருகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து சூதாடியதாக திருப்பூர், நெகமம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 37), குமாரராஜ் (50), ராமகிருஷ்ணன் (44), நாகராஜ் (42), ரமேஷ்குமார் (40), மனோகரன் (45), மணிகண்டன் (35), மற்றொரு மனோகரன் (34), முகமது அலி (38) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.