மேட்டுப்பாளையம், பிப்.24: மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உள்ள மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சின்னக்காமனனுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊட்டி சாலையில் உள்ள மளிகைக்கடைகளில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பைஜூர் ரஹ்மான் (48) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் எஸ்.எம்.நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 41 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பைஜூர் ரகுமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.