மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை ஏற்று கொள்ள முடியாது – பொன் ராதாகிருஷ்ணன்

0
131

மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்து கடவுள் குறித்து பேச சீமான் போன்றவர்களுக்கு தகுதி இல்லை. தகுதியில்லாதவர் தகுதி நிறைந்த வி‌ஷயங்களை பேச கூடாது. சீமான் அரசியல், சமுதாயம் குறித்து மட்டும் பேசட்டும். ஆன்மிகம் மீது நம்பிக்கை இல்லையெனில் விட்டு விட வேண்டும். யாகவராயினும் நா காக்க வேண்டும். இதுபோல கேவலமான வார்த்தைகளை பேசுபவர்களை யோக்கியமற்றவர்களாகத்தான் கருத முடியும்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் தமிழர்களின் மானத்தை வாங்கும் வகையில் போராட்டம் நடத்துவது மன்னிக்க முடியாத குற்றம். இந்த போராட்டங்களுக்கு தமிழகத்தை சேர்ந்த சில கட்சிகள் நிதி உதவி செய்கின்றன. இதனை தமிழர் என்ற உணர்வோடு கண்டிக்க வேண்டும்.

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. ஆய்வறிக்கை தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை குறித்து ராகுல்காந்தி கருத்து கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சியினருக்குத்தான் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.