கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் 4-ம் ஆண்டு இளங்கலை மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக அங்கலக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், மூலிகை செடிகளின் மகத்துவம் குறித்தும், கோ-கீரின் திட்டம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் புங்கம், நாவல்மரம் போன்ற மரங்களையும் வல்லாரை, கேசவர்த்தினி, பொடுதலை, ஆடாதோடா போன்ற மூலிகை செடிகளையும் குரோட்டன்ஸ் எனப்படும் அழகு தாவரங்களையும் பள்ளி வளாகத்தில் மாணவிகள் நட்டு அதன் பயன்பாட்டினை எடுத்து உரைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.