மூன்று சட்டசபை தொகுதிகளில் கள ஆய்வு வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர்

0
86

கோவை: கோவைக்கு நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கான தேர்தல் பார்வையாளர், மூன்று சட்டசபை தொகுதிக்குட்பட்ட முகவரிகளுக்கு, நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

அனைத்து வாக்காளர்களின் பெயர்களும், பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு சுருக்க திருத்த முகாம், கடந்த நவ.,16, 17, மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் நடந்தது.

இதன் வாயிலாக கோவையில் 1,35,206 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. அனைத்து விண்ணப்பங்களும் தொகுதி மற்றும் வார்டு வாரியாக பிரித்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் ஆகியவற்றை, தேர்தல் பிரிவு பணியாளர்கள் மேற்கொண்டனர்.

அப்பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், தேர்தல் பிரிவு பணியாளர்கள் மேற்கொண்ட சிறப்பு திருத்த முகாம் குறித்த தகவல்கள் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யவும், நேற்று கோவைக்கு வாக்காளர் பட்டியலுக்கான தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரன் வருகை தந்தார்.

அவருடன், கலெக்டர் கிராந்திகுமார் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம்,சிங்காநல்லுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதி வீடுகளில் உள்ள வாக்காளர்களிடம் பெயர் முகவரி குறித்து விசாரித்தனர். அவர்கள் சொல்லும் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்று, பட்டியலுடன் இணைத்து ஆய்வு மேற்கொண்டார்.