முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்ப்பு முகாம்

0
78

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் சார்பில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில் முன்னாள் ராணுவத்தினருக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் கமாண்டண்ட் எஸ்.கே. யாதவ் தலைமை தாங்கினார். இதில், கோவை கலெக்டர் சமீரன் பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர் களை சார்ந்தோர் என மொத்தம் 6,591 பேர் உள்ளனர். இவர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப் படுகிறது. முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் கொடி நாள் வசூலில் கோவை மாவட்டம் இலக்கை விட அதிகமாக எய்துள்ளது.

வருகிற ஆண்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாம் கோவையில் நடைபெற உள்ளது.

நீங்கள் முன்னுதாரமாக இருந்து இத்துறையில் பணியாற்றினால் என்னென்ன சலுகைகள் உள்ளது என்பது பற்றி எடுத்து கூறி முகாம்களில் இளைஞர்கள் கலந்து கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், முன்னாள் படை வீரர்கள் நலன் உதவி இயக்குனர் மேஜர் ரூபா சுப்புலெட்சுமி உள்பட முன்னாள் படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.