முத்து மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

0
11

அன்னூர்: முத்துமாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நாளை (17ம் தேதி) நடைபெறுகிறது

ஆம்போதி ஊராட்சி, செல்லப்பம்பாளையம், சாலையூரில், பழமையான மகா கணபதி, பாலமுருகன், மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது.

கும்பாபிஷேக விழா வேள்வி பூஜை உடன் இன்று (16ம் தேதி) துவங்குகிறது. காலையில் பவானி ஆற்றில் புனித நீர் எடுத்து வருதல், மாலையில் முதல் கால வேள்வி பூஜை, இரவு எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.

நாளை (17ம் தேதி) காலை 9:30 மணிக்கு கணபதி, பாலமுருகன் மற்றும் முத்துமாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

இதையடுத்து, மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.