முத்துாஸ் மருத்துவமனை வளாகத்தில் கும்பாபிஷேகம்

0
5

கோவை : சிங்காநல்லுார் சாலையில் உள்ள, முத்துாஸ் மருத்துவமனையில், கோவை மண்டலத்தின் முதல் நவகிரக விநாயகர் கல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோவில் கட்டுவதற்கான திருப்பணிகளின் போது, புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, உள்ளிட்ட நவகிரகங்களை உள்ளடக்கிய, நவகிரக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முத்துாஸ் மருத்துவமனையின் தலைவர் சரவணக்குமார் தலைமையில், இரண்டு கால யாக, வேள்வி பூஜைகள் நடைபெற்றன. யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு,விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது

முருகரின் ஆறுபடை வீடு, ஒன்பது கிரகக் கோவில்கள்,18 சிவ ஸ்தலங்கள், நூபர கங்கை தீர்த்தம், திருப்பதி, ராமேஸ்வரம், காசி, மகா கும்பமேளா தீர்த்தம் மற்றும் பல புனித தீர்த்தங்கள் கொண்டு, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் முன்னின்று வழிபாடுகளை நடத்தினர்.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரேமா, இணை இயக்குனர் செல்வக்குமார், அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.