முதுமை காலங்களில் ஆண்களும் சரி, பெண்களும் சரி திடீரென தடுமாறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு, காலம் முழுவதும் அவதி அடைந்து வருகின்றனர்.
அதில் இருந்து அவர்களை தற்காத்து கொள்ள, சில வழிமுறைகளை கூறுகிறார் பிசியோதெரபிஸ்ட் சதீஷ்குமார்.
முதுமை காலங்களில் தடுமாறி விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டு காலம் முழுவதும் அவதி அடைந்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்னையில் இருந்து விடுபட, பல வழிமுறைகள் உள்ளன.
n கட்டிலை, அவர்கள் வலது அல்லது இடது என எந்த பக்கத்தில் இருந்து எழுந்து செல்வார்களோ, அந்த பக்கத்தில் சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்.
n இரவு நேரங்களில் உதவி தேவைப்படும் பட்சத்தில், பெல்லை அழுத்தி அழைக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
n கட்டிலில் இருந்து எழுந்து செல்வதற்கு, சுவர்களில் கைப்பிடி அமைத்து கொடுக்கலாம்.
n மின் விசிறிகளை அவர்களே இயக்கும்படி, ‘ரிமோட்’ அல்லது கைகளை தட்டும் போது இயங்குவது போன்று அமைத்து கொடுக்க வேண்டும்.
n கட்டிலின் ஒரு பகுதி சுவரை ஒட்டியும், கீழே விழுந்தால் அடிபடாதவாறு கீழே மேட், பாத்ரூம் செல்லும் போது கதவை திறந்தால், விளக்கு எரிவது ஆகிய வசதிகளை செய்து கொடுத்தால், அவர்கள் கீழே விழுந்து அடிபடுவதை தவிர்க்கலாம்.
n முதுமை காலத்தில் பலருக்கு தலை சுற்றல் இருக்கிறது. இதனை தடுக்க, படுத்திருக்கும்போது பாதங்களை சிறிது நேரம் அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். கட்டிலில் இருந்து எழுந்தவுடன் ஒரு நிமிடம் கட்டிலில் அமர்ந்து, பின் மெதுவாக எழ வேண்டும்.
n முதியவர்கள் முடிந்தால் மூச்சு பயிற்சி செய்யலாம். மூளைக்கு ஆக்சிஜன் செல்லும் போது, தலை சுற்றல் இருக்காது.
n யாராவது அழைத்தால் தலையை, உடலுடன் சேர்த்து திருப்ப வேண்டும். பிசியோதெரபிஸ்டிடம் சென்று எளிய பயிற்சி மேற்கொண்டால் கால், மூட்டு வலிமை பெறும்.