முதல் சம்பளத்தில் படிப்புக்கு உதவி!

0
117

ஜனனி அய்யர் `விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் நடித்ததன் மூலம் பேசப்பட்டார். பாலாவின் `அவன் இவன்’ படத்தில் நடித்த பின், ஜனனி அய்யர் பிரபலமானார்.

அந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு மலையாள பட வாய்ப்புகளும் வந்தன. சில மலையாள படங்களில் நடித்தார். என்றாலும், ஜனனி அய்யருக்கு குறிப்பிட்டு சொல்லும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.

அவரிடம், “உங்கள் முதல் சம்பளத்தை எப்படி செலவு செய்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜனனி அய்யர் கூறும்போது, “என் முதல் சம்பளத்தை வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகனின் `ஸ்கூல் பீஸ்’ கட்டுவதற்கு கொடுத்து விட்டேன்” என்றார்.