முதல்வர் குறித்து தவறாக பேசியதாக இரு பா.ஜ., நிர்வாகிகளுக்கு சிறை

0
4

கோவை; தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து தவறாக பேசியதாக, பா.ஜ., நிர்வாகிகள் இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தன

கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை, போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், செல்வபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில், பா.ஜ., ஆலயம் மற்றும் ஆன்மிகம் மண்டல் தலைவர் துரை, 43 மற்றும் துணை தலைவர் மணிவண்ணன் ஆகியோர், தமிழக முதல்வர் குறித்து கொச்சையாக பேசியதாக, செல்வபுரம் போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.