முகவரி கேட்பது போல் செயின் பறித்த பெண்கள்

0
50

கோவை: துடியலுார் பகுதியில் முகவரி கேட்பது போல், மூதாட்டியிடம் செயின் பறித்து சென்ற இரு பெண்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தொப்பம்பட்டி, குருடம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி, 66. இவர் தொப்பம்பட்டி, போஸ்டல் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரண்டு பெண்கள் ஸ்கூட்டரில் வந்தனர்.

அவர்கள், மூதாட்டியின் அருகில் ஸ்கூட்டரை நிறுத்தி, ஒரு முகவரியை கேட்டுள்ளனர். மூதாட்டி எனக்கு முகவரி தெரியவில்லை, வேறு யாரிடமாவது கேளுங்கள் என கூறினார்.

அப்போது, மூதாட்டி அசந்த நேரத்தில், ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த பெண், மூதாட்டி கழுத்தில் இருந்த 5.5 சவரன் தங்க செயினை பறித்தார். பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பினர்.

லட்சுமி துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.