பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நான படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து நடிகைகள் உட்பட சாதாரண பெண்கள், தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வருகின்றனர்.
இவ்வரிசையில் பிரபல தமிழ் கவிஞர் ஒருவர் மீது பாலியல் தொல்லை புகார் ஒன்று வந்ததாக பாடகி சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதில் ஒரு பெண், வைரமுத்துவிற்கு சொந்தமான ஹாஸ்டலில் தான் தங்கியிருந்த போது அவர் தன்னிடம் அத்துமீறீ நடந்துக்கொண்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொருப் பெண் தன்னிடம் தமிழ் நடிகர் தவறாக நடந்துக்கொண்டார் என பகிர் தகவல் வெளிட்டுள்ளார். மேலும் அப்பெண், நடிகரை வேலை விஷயமாக சந்திக்க சென்றிருந்தேன். அப்போது அவர் என்னை கட்டி அனைத்து முகத்தில் முத்தமிட்டார். மேலும் வேலையை நன்றாக செய் என்றும் பார்க்க நான் நல்லா இருக்கிறேன் என்றும் கூறினார்.
பின் நான் அந்த வேலையையே விட்டுவிட்டேன். அவருக்கு செல்வாக்கு இருப்பதால் இதை அப்போது நான் வெளியே சொல்லி இருந்தாலும் பலன் கிடைத்திருக்காது என கூறியுள்ளார்.
இதே போல் 19 ஆண்டுகளுக்கு பிறகு, கேரளாவைச் சேர்ந்த நடிப்பு இயக்குனர், டெஸ் ஜோசப், நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது பாலியல் புகார் கூறி உள்ளார். அவர் தனது 20 வயதில் முகேஷ் நடத்திய ‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியில் பணிபுரிந்தார்.
முகேஷ் தனது அறைக்கு பல முறை அழைத்திருந்தார், அவளுடைய அறையை எனக்கு அடுத்ததாக மாற்றினார், என டெஸ்ஜோசப் டுவீட் செய்து உள்ளார்.
I was 20 years old quiz directing #koteeswaran when the mallu host #mukeshkumar called my room multiple times and then changed my room to beside his on the next sch. My then boss @derekobrienmp spoke to me for an hour & got me out on the next flight. 19 yrs on thank you Derek.
— Tess Joseph (@Tesselmania) October 9, 2018
இரண்டாவது டுவீட்டில், அவர் ஓட்டல் லீ மெரிடியன், சென்னையில் நடந்ததை குறிப்பிட்டு உள்ளார்.
” எங்கள் குழுவே நான் மட்டுமே பெண். ஒரு இரவு முழுவதும் முடிவடையாத அழைப்புகள் நான் என் சக நண்பர் அறையில் தங்கினேன். என கூறி இருந்தார். இது குறித்து முகேசிடம் கேட்டதற்கு எனக்கு ஞாபகமில்லை என கூறி உள்ளார்