மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

0
93

போராட்டம்

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்தனர்.

கோஷங்கள்

அப்போது அவர்கள் பஞ்சப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், வாரிய ஆணை எண்-2(12.04.2022)-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மறுபகிர்வு முறையை கைவிட வேண்டும், வெளி ஆட்களை பணியமர்த்தக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

பணிகள் பாதிப்பு

கோவை மண்டலத்தில் மின்வாரிய ஊழியர்கள் 8 ஆயிரத்து 834 பேர் உள்ளனர். இவர்களில் நேற்று 2 ஆயிரத்து 988 பேர் மட்டும் வருகை தந்தனர். 5 ஆயிரத்து 424 பேர் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர். 422 ஊழியர்கள் விடுப்பு கடிதம் கொடுத்தனர்.

இந்த போராட்டத்தால் மின்வாரிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.