மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

0
152

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோவை மாவட்டம் முழுவதும் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். கோவை டாடாபாத்தில் உள்

கோவை டாடாபாத்தில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை என்ஜினீயர் டேவிட் ஜெபசிங் தலைமை தாங்கினார். இதில், செயற்பொறியாளர்கள், ஊழியர்கள் தரையில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த மசோதாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் மாநில அரசின் உரிமை பறிபோகும். மின் கட்டணத்தை நிர்ணயிக்கின்ற உரிமையும் பறிக்கப்பட்டு விடும். இலவச மின்சாரம், மானியம் போன்றவை ரத்தாகும்.புதிய சட்டத்தால், பொதுமக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மின்சார வாரிய சொத்து மற்றும் மின் பாதை உள்ளிட்டவற்றை தனியார் முதலாளிகள் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

மக்களுக்கு பாதிப்பு

மின் நுகர்வோர்களை தேர்வு செய்யும் உரிமை தனியாருக்கு போய்விடும். இதனால் குறைந்த மின்பயன்பாட்டாளர்கள் பாதிக் கப்படுவார்கள். மின்சாரம் என்பது சந்தை பொருளாகி விட்டால் மின்சார வாரிய ஊழியர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

எனவே பொது சொத்துகளை தனியார்மயப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்ற முறையில் நாங்கள் போராடி வருகிறோம். எனவே எங்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மசோதா நகல் எரிப்பு

இதையடுத்து கோவை கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய அரசை கண்டித்தும், புதிய மின்சார சட்ட திருத்த மசோதா நகலை எரித்தும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.