மின்சார வசதி கேட்டு கலெக்டரிடம் புகார்

0
9

கோவை: மதுக்கரை மயிலாம்பாறை பகுதி மக்கள், தங்களது பகுதியில் கடந்த எட்டாண்டுகளாக மின் வசதி இல்லை எனவும், குழந்தைகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், கலெக்டரிடம் முறையிட்டனர்

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மனுக்களை வழங்கினர்.

இதில், மதுக்கரை திருமலையாம்பாளையம் பேரூராட்சி மயிலாம்பாறை பகுதியை சேர்ந்த மக்கள், ‘எங்கள் பகுதியில், எட்டு ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை, குழந்தைகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்’ என்று கூறி, சிம்னி விளக்குடன் மனு அளித்தனர்.