கோவை, ஜன. 18: தமிழகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் பணி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த ஆனந்த் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் மேலாளராக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிபுரிந்து வந்த எஸ். புவனேஷ்வரி கோவை மாவட்ட விளையாட்டு அலுவலராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் கோகோ மற்றும் கபடி பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.