கோவை : பள்ளிக்கல்வி அதிகாரிகளின் மெத்தன போக்கால், 1,500 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படவில்லை என, புகார் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தில், 150க் கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், 31ம் தேதி ஊதியம் வழங்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனத்தால், இம்மாதம் ஆசிரியர்களுக்கு, ஜன., 31ம் தேதி ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், இ.எம். ஐ., உள்ளிட்ட பல்வேறு நிதிச்சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் பிரபாகரன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, நிதி ஒதுக்கீடு அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படும். அது ஊதியம் என்ற அடிப்படையில் வழங்கப்படாது. அப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தின் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படும்
பெற்று தரும் அலுவலர். ஆனால், வீட்டு வாடகை படிக்கான மானியம் கிடைக்கவில்லை எனக்கூறி, சம்பள பட்டியல் தராமல் நிறுத்தியுள்ளார்.
வாடகை படிக்கான மானியம் வராதது, முன்கூட்டியே அவருக்கு தெரிந்திருக்கும். அதை அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து, அதை பெற்றிருக்க வேண்டும். ஆனால், செய்யத்தவறியுள்ளார். இதனால் ஆசிரியர்கள் பல்வேறு நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட கல்வி அலுவலர் கோமதி(இடைநிலை) கூறுகையில், ”நிதியமைச்சகத்தில் இருந்து எங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் டிச., வரை ஒதுக்கப்படும். ஜன., மாதத்துக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். தற்போது ஒதுக்கீடு செய்யப்படாததால், ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, நிதித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் ஊதியம் வழங்கப்படும்,” என்றா