மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

0
42

கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டியவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. 9 மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 18 பேருக்கு நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டது. கண், காது, உடல் இயக்க குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு ஆகியவற்றில் வல்லுனர்களான டாக்டர்கள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினர். முகாமில் பிறந்தது முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 102 பேர் கலந்து கொண்டனர். முகாமில் மாவட்ட திட்ட அலுவலர் செந்தில் குமார், ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து, வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் ஹெரன், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.